வாழைத்தண்டு சூப் செய்ய தேவையான பொருள்கள்:
வாழைத்தண்டு – 1 தண்டு
தக்காளி – 1
மிளகாய் வற்றல் – 2
மஞ்சள் தூள் – சிறிதளவு
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகு – 5
வெங்காயம் – 5
இஞ்சி – 1 துண்டு
பூண்டு பல் – 2
கொத்தமல்லிதூள் – 1 மேசைக்கரண்டி
கறிவேப்பலை – தேவையான அளவு
தனியாதூள் – 1 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 2 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் வாழைத்தண்டை எடுத்து, சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின்பு கடாயை அடுப்பில் வைத்து அதில், நறுக்கிய வாழைத்தண்டை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பாதியளவு வேகும் வரை கொதிக்க விடவும்.
மேலும் கடாயை அடுப்பில் வைத்து அதில், சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதனுடன் தனியா தூள், சீரகம், மிளகு போட்டு தனித்தனியாக வறுத்து எடுத்து, மிக்சிஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும்.
பின்பு நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய் வற்றல், கொத்தமல்லி, கறிவேப்பலை, இஞ்சி, பூண்டு எடுத்து மிக்ஸிஜாரில்போட்டு அரைத்து விழுதாக எடுத்து கொள்ளவும்.
பிறகு அடுப்பில் வாணலியை வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் அரைத்த விழுதை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
பின்னர் பாதியளவு வேக வைத்த வாழைத்தண்டுடன், வதக்கிய கலவையையும், அரைத்த தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க வைத்து, இறுதியில் கொத்தமல்லி, கறிவேப்பிலை சிறிது தூவி இறக்கி
பரிமாறினால் சுவையான வாழைத்தண்டு சூப் ரெடி.