Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புற்று நோய்களை கூட தடுக்க உதவும் வாழைக்காயில்… காரசாரமான ருசி நிறைந்த… புதுவகையான ஸ்னாக்ஸ் செய்து அசத்துங்க..!!

வாழைக்காய் புட்டு செய்ய தேவையான பொருட்கள்:
வாழைக்காய்           – 2
உப்பு                              – தேவையான அளவு
பெருங்காயம்           –  சிறிதளவு
எண்ணெய்                 – 2 டீஸ்பூன்
கடுகு                             – 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு      – 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்    – 3
கறிவேப்பிலை        – சிறிதளவு

செய்முறை:

முதலில்   பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வாழைக்காய்களை போட்டு மூழ்கும் வரை தண்ணீரை ஊற்றி வேக வைக்கவும்.

பின்பு வேக வைத்த வாழைக்காய் பாதி வெந்தும், எடுத்து ஆற வைத்து,  அதன் தோலைச் சீவி விட்டு, அதை  வாழைக்காய்ப்புட்டு அரிப்பில் நன்கு துருவிக் கொள்ளவும்.

அதன் பின்பு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டு தாளித்து,  துருவிய  வாழைக்காயை சேர்த்து, சிறிது உப்பு போட்டு தூவி நன்கு வதங்கியதும் லேசாகத் தண்ணீர் தெளித்துக் கொள்ளவும்.

மேலும் அதனுடன் பெருங்காயதூள்  சேர்த்து  நன்கு கிளறி விட்டு, வெந்தவுடன் இறக்கி பரிமாறினால் ருசியான  வாழைக்காய் புட்டு தயார்.

Categories

Tech |