Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வாழைக்காயை வினாக்குறிங்களா ? கவலைய விடுங்க… மாலை நேர ஸ்னாக்ஸாக… சூப்பரா ஒரு ரெசிபி செய்யலாம்..!!

வாழைக்காய் சிப்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:

வாழைக்காய்  – 1
உப்பு                     – தேவையான அளவு
மிளகாய் தூள் – தேவையான அளவு
எண்ணெய்       –  தேவையான அளவு

செய்முறை:

முதலில் வாழைக்காயை எடுத்து சுத்தம் செய்து,தோல் நீக்கியதும், அதை  மெல்லியதான அளவில், வட்ட வட்டமாக வெட்டி எடுத்து கொள்ளவும்.

பிறகு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிக்க போதுமான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு சூடேற்றியதும் அதில் நறுக்கிய வாழைக்காய் துண்டுகளைப் போட்டு,நன்கு வேக வைத்து, பொன்னிறமாக பொரித்து, பாத்திரத்தில் போட்டுகொள்ளவும்.

பின்பு, பொரித்து எடுத்த வாழைக்காய் துண்டுகளுடன், மிளகாய் தூள்,  உப்பு சேர்த்து சுற்றிலும் எல்லா இடத்திலும் படும்படி விரவி எடுத்து பரிமாறினால், மொறுமொறுப்பான ருசியில் வாழைக்காய் சிப்ஸ் தயார்.

Categories

Tech |