Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மூளை செல்களின் வளர்ச்சியை அதிகரிக்க செய்து… நினைவு ஆற்றல் மேம்பட… இதோ அருமையான ரெசிபி ..!!

வஞ்சிரம் மீன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:

வஞ்சிரம் மீன்                    – 500 கிராம்
சின்ன வெங்காயம்         – 100 கிராம்
நாட்டுத் தக்காளி              – 100 கிராம்
பெரிய வெங்காயம்        – 2
பூண்டு, புளி                         – தலா 100 கிராம்
காய்ந்த மிளகாய்             – 4
கறிவேப்பிலை                 – சிறிதளவு
நல்லெண்ணெய்              – 100 மில்லி லிட்டர்
வெந்தயம்                           – சிறிதளவு
மிளகாய்த் தூள்                – 1 ஸ்பூன்
கடுகு, சோம்பு                    – சிறிதளவு
மஞ்சள் தூள்                      – அரை ஸ்பூன்
தனியா                                 – 2 ஸ்பூன்
தேங்காய் துருவல்         – அரை கப்

செய்முறை:

சின்ன வெங்காயம், நாட்டு தாக்களி, பெரிய வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். மேலும் நறுக்கிய பெரிய வெங்காயத்தை மிக்சிஜாரில் போட்டு அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.

பின்பு வஞ்சிரம் மீனை பாத்திரத்தில் எடுத்து, பெரிய துண்டுகளாக நறுக்கி, சுத்தம் செய்து கொள்ளவும். அதன் பின்பு ஒரு சிறிய பாத்திரத்தில் புளியை எடுத்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து வைக்கவும்.

பின்னர் தேங்காயை எடுத்து துண்டுகளாக நறுக்கி, மிக்சிஜாரில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். மேலும் அடுப்பில் கடாயை வைத்து, அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயம், கடுகு, சோம்பு போட்டு தாளித்ததும் அரைத்த வெங்காய விழுதைச் சேர்த்து வதக்கவும்.

மேலும் வெங்காயம் சிறிது வதங்கியதும் அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு, பூண்டு நன்கு வதங்கியதும், அதில் மிளகாய்த் தூள், தனியா, மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கிய பின்னர், சிறிதளவு தண்ணீர் ஊற்றி கிளறிவிடவும்.

பின்பு கரைத்த  புளி கரைசலை ஊற்றி, கெட்டியாகும் வரை கிளறிவிட்டபின், தேங்காயை துருவலை போட்டு  சேர்க்கவும்.

பிறகு, நறுக்கிய வஞ்சிரம் மீன் துண்டுகளை போட்டு, சில நிமிடம் நன்கு கொதிக்க விட்டு கெட்டியான கிரேவி போல் ஆனதும், இறுதியில் கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறினால், ருசியான வஞ்சிரம் மீன் கிரேவி ரெடி.

Categories

Tech |