Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

டீயுடன் குடிக்க…ஏற்ற சைடிஸ்..!!

வாழைக்காய் பஜ்ஜி செய்ய தேவையான பொருட்கள் :

வாழைக்காய்                – 1
கடலை மாவு                – 1 கப்
அரிசி மாவு                    – 2 டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு                 – 1 சிட்டிகை
மிளகாய் தூள்              – 1/2 டீஸ்பூன்
ஓமம்                               – 1 டீஸ்பூன்
உப்பு                                 – தேவையான அளவு
கொத்தமல்லி             – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எண்ணெய்                   –  தேவையான அளவு
தண்ணீர்                        – 1/2 கப்

செய்முறை :

முதலில் வாழைக்காயை எடுத்து தோலுரித்ததும்,  நீளமாக மெல்லியதான அளவில் வெட்டி எடுத்து கொள்ளவும். பின்பு   பாத்திரத்தை எடுத்து, அதில் கடலை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு, ஓமம், மிளகாய் தூள், உப்பு மற்றும் கொத்தமல்லி தழையை  சேர்த்து தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்தில் நன்கு கரைத்து கொள்ளவும்.

அதன் பின்பு அடுப்பில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் நீளமாக வெட்டி வைத்துள்ள வாழைக்காயை எடுத்து, கலந்து  வைத்த மாவில் நனைத்து கொதிக்கின்ற எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறினால் சுவையான வாழைக்காய் பஜ்ஜி ரெடி.

Categories

Tech |