Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சிறு நீரகத்தில் கற்கள் வராமல் தடுக்கவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும்… அனைவர்க்கும் பிடித்த ருசியில்… அருமையான ரெசிபி..!!

வாழைப்பூ சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு         – கால் கிலோ
மஞ்சள்தூள்                  – கால் டீஸ்பூன்
மிளகாய் தூள்               – அரை டீஸ்பூன்
கரம் மசாலா                  – அரை டீஸ்பூன்
நறுக்கிய வாழைப்பூ  – ஒரு கப்
சின்ன வெங்காயம்     – 7
பூண்டு                                – 2 பல்
உப்பு                                    – தேவையான அளவு
எண்ணெய்                       – தேவையான அளவு
கொத்தமல்லி இலை  – தேவைகேற்ப
உருளைக்கிழங்கு        – 2

செய்முறை:

முதல்ல வாழைப்பூவில் உள்ள இதழ்களை எடுத்துட்டு, அதிலுள்ள மடல்களில் உள்ள  நார்களை துற நிக்கிட்டு, சின்ன சின்ன துண்டாக வெட்டினதும் அத தண்ணீர் போட்டு வச்ச பிறகு, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலையையும் சின்ன துண்டுகளாக நறுக்கனும்.

கோதுமை மாவ பாத்திரத்துல போட்டு தேவைக்கேற்ப உப்பு போட்டு, லேசா எண்ணெய் ஊற்றி, வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல நல்லா கெட்டியா பிசைஞ்சினதுக்கு, அந்த உருண்டையில் எண்ணெய் ஊற்றி தடவி சில நிமிடம் அப்படியே வச்சிடனும். உருளைக்கிழங்கை தண்ணீர்ல கழுவி குக்கர்ல வேக வச்சி எடுத்து தோல் உறிச்சி, நல்லா மசிச்சுக்கனும்.

பிறகு அடுப்பில கடாயை வச்சி ஒரு ஸ்பூன் அளவுக்கு எண்ணெய் ஊற்றி பூண்டை துறுவி போட்டு நல்லா வதங்கின பிறகு, நறுக்கி வச்ச வெங்காயத்த போட்டு நல்லா வதக்குவதற்கு லேசா உப்பு போட்டு வதங்கினதும், அதில தண்ணீர்ல போட்ட வாழைப்பூவ வடிக்கட்டி வதக்கிய வெங்காயத்தில போட்டு நல்லா வதக்கிக்கணும்.

வாழைப்பூ நல்லா வதங்கினதும், அதில மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள் தூவி நல்லா வதக்கின பிறகு, மசிச்சு வச்ச உருளைக்கிழங்கை போட்டு நல்லா வதக்கினதும், ருசிக்கேற்ப உப்பு போட்டு நல்லா கிளறிவிட்டு கடைசியா நறுக்கி வச்ச கொத்தமல்லி இலைய போட்டு நல்லா வதக்கி உருண்டைகளாக உருட்டி வச்சிக்கிடனும்.

பின்னர் பிசைஞ்சி வச்ச கோதுமை மாவ  உருண்டைகளாக ஒவ்வொன்றாக உருட்டி, சப்பாத்தி தேய்ப்பது போல தேய்த்து அதன் நடுவில, உருட்டி வச்ச வாழைப்பூ உருண்டைகளை வச்சி, தேய்த்த கோதுமை உருண்டையில் முடின பிறகு, மறுபடியும் அதை சப்பாத்தி தேய்ப்பது போல தேய்ச்சி எடுத்துக்கணும்.

மேலும் அடுப்புல தோசை கல்லை வச்சி எண்ணெய் ஊற்றி,  தேய்ச்சி வச்ச சப்பாத்திகளை ஒவ்வொன்றாக போட்டுநல்லா வெந்ததும், திருப்பி போட்டு நல்லா வேக வச்சி எடுத்து சூடாக பரிமாறினால், மிருதுவான  வாழைப்பூ சப்பாத்தி ரெடி.

Categories

Tech |