Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

நாள்தோறும் சப்பாத்தியவே சாப்பிட போரடிக்கா ? அப்போ அதவச்சி புதுவகையான ரெஸிபி செய்து அசத்துங்க..!!

வெஜிடேரியன் முட்டை சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்: 

சப்பாத்தி                 – 4
கடலை மாவு       – 6 டேபிள் ஸ்பூன்
வெங்காயம்          – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய்  – 1 (பொடியாக நறுக்கியது)
சில்லி ப்ளேக்ஸ் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்         – 1/2 டீஸ்பூன்
உப்பு                          – தேவையான அளவு
கொத்தமல்லி      – சிறிது
எண்ணெய்            – தேவையான அளவு
தண்ணீர்                 – தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெங்காயத்தை தோல் நீக்கியபின், அதனுடன் பச்சை மிளகாய்,கொத்தமல்லி தழையை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

பின்பு ஒரு சிறிய பாத்திரத்தில் கடலை மாவு, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய்,சில்லி ப்ளேக்ஸ்,மஞ்சள் தூள், ருசிக்கேற்ப உப்பு, நறுக்கிய கொத்தமல்லி தழை, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி,  பிசைந்து, ஓரளவு கெட்டியான பேஸ்ட் போல நன்கு கலந்து கொள்ளவும்.

மேலும் அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றி சுற்றிலும் தடவியபின், ஒவ்வொரு சப்பத்தியாக எடுத்து, கலந்து வைத்த பேஸ்ட் கலவையை சப்பாத்தியின் நடுவில் வைத்து சுற்றிலும் படும்படி நன்கு தடவிகொள்ளவும்.

பிறகு பேஸ்ட்டை தடவிய சப்பாத்தியை எடுத்து, சூடான தோசை கல்லில் வைத்து, நன்கு வேக வைத்து மறுபுறம் திருப்பி போட்டு நன்கு வேக வைத்து எடுத்தால், ருசியான வெஜிடேரியன் முட்டை சப்பாத்தி தயார்.

Categories

Tech |