Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

எளிதில்…செய்ய கூடிய…சுவையான…மார்னிங் டிபன்..!!

வெண் பொங்கல் செய்ய தேவையான  பொருள்கள்: 

பச்சரிசி                      – 200 கிராம்
பாசிப்பருப்பு            – 100 கிராம்
மிளகு                         – 20
இஞ்சி                         – 1 துண்டு
சீரகம்                         – 1 டீஸ்பூன்
நெய்                            – அரை கப்
உப்பு                            – தேவைக்கேற்ப
முந்திரி பருப்பு       – 10
கறிவேப்பிலை      – சிறிது
பெருங்காயம்         – சிறிது

செய்முறை:

முதலில் பாத்திரத்தில் அரிசி, பருப்பை போட்டு நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். அதன் பின்பு இஞ்சியை எடுத்து தோல் நீக்கி துருவி எடுத்து கொள்ளவும்.

பின்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில்  சுத்தம் செய்த அரிசி,பருப்பை போட்டு, உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும்.

மேலும் அடுப்பில் கடாயை வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி சூடானதும், சீரகம், பெருங்காயம், முந்திரி, மிளகு, துருவிய இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.

பின்பு அதை  வேக வைத்த கலவையில்  சேர்த்து நன்கு கிளறியவுடன் சிறிது நெய் சேர்த்து பரிமாறினால் சுவையான வெண் பொங்கல் ரெடி. இதை சட்னியுடன் சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

 

Categories

Tech |