Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சாதத்துக்கு ஏற்ற… காரசாரமான வத்தக்குழம்பில்… புதுவகையான ரெசிபி செய்து அசத்துங்க..!!

வெண்டைக்காய் வத்தக்குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய்  – 12
புளி                               – எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள்            – 1/2 டீஸ்பூன்
உப்பு                             – தேவையான அளவு
கறிவேப்பிலை       – ஒருகொத்து
கொத்தமல்லி          – அலங்கரிக்க

வறுத்து அரைக்க:

கடலைப்பருப்பு       – 1 டீஸ்பூன்
துவரம்பருப்பு           – 1/2 டீஸ்பூன்
தனியா                         – 1 டீஸ்பூன்
வெந்தயம்                   – 1/4 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்     – 4
பெருங்காயம்             – சிறிதளவு
வெங்காயம்                – 1
தக்காளி                         – 1/2
பூண்டு                            – 3 பற்கள்

தாளிக்க:

நல்லெண்ணெய்       – 3 டீஸ்பூன்
கடுகு                               – 1 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு        – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் வெண்டைக்காய், வெங்காயம், தக்காளியை எடுத்து சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். பின்பு ஒரு சிறிய பவுலில் தண்ணீர் ஊற்றி புளியை போட்டு அரை மணி நேரம் ஊற வைத்தபின், நன்கு கரைத்தும், அதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில்கடாயை வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, வெந்தயம், தனியா, மிளகாய்வற்றல் கிள்ளி போட்டு, நன்கு பொன்னிறமாக வதக்கியபின் இறக்கி கொள்ளவும்.

மேலும் அதே வாணலியை அடுப்பில் வைத்து கூடுதலாக எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளியை தனித்தனியாக போட்டு சிவக்க நன்கு வதக்கி இறக்கி ஆற வைத்து கொள்ளவும்.

பிறகு மிக்சிஜாரில் வதக்கி இறக்கி வைத்த கடலை பருப்பு கலவையையும், வதக்கிய வெங்காயம்,பூண்டு, தக்காளியை போட்டு நன்கு மையாக அரைத்து கொள்ளவும்.

அடுப்பில் நான்ஸ்ட்டிக் தவாவை வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம் பருப்பை போட்டு தாளித்ததும் அதில் நறுக்கிய வெண்டைக்காயை போட்டு நன்கு வேகும் அளவுக்கு வதக்கியபின், கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.

பின்பு கொதிக்க வைத்த வெண்டைக்காயானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரைத்து வைத்த மசாலா கலவையை சேர்த்து மசாலாவின் வாசனை போகும் வரை நன்கு கொதிக்க வைத்து கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கருவேப்பிலை, கொத்தமல்லித் தழையை போட்டு பொரிந்ததும் இறக்கி, கொதிக்க வைத்த கலவையில் ஊற்றி கரண்டியால் கிளறிவிட்டபின், சாதத்துடன் பரிமாறினால், ருசியான வெண்டைக்காய் வத்தக்குழம்பு ரெடி.

Categories

Tech |