வெண்டைக்காய் அவியல் செய்ய தேவையான பொருட்கள்:
புளிச்சாறு – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 1/2 கப்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் – 3/4 கப்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
சீரகம் – 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்பு அதனுடன் மஞ்சள் தூள், வரமிளகாய், சீரகம் எடுத்து மிக்சிஜாரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.
பின்பு வெண்டைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, வெண்டைக்காயைப் போட்டு சில நிமிடம் வதக்கவும்.
பின்பு அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி, பின்பு அதில் புளிச்சாறு,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து நன்கு சில நிமிடம் நன்கு வேக வைக்கவும்.
பிறகு அதில் அரைத்து வைத்த கலவையை சேர்த்து, சில நிமிடம் கிளறியபின் இறக்கி பரிமாறினால், வெண்டைக்காய் அவியல் ரெடி.