Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இடுப்பு எலும்பை மேம்படுத்தி… உடம்பை வலுப்பெற செய்யணுமா ? அப்போ கவலைய விடுங்க… இந்த ரெசிபிய செய்து அசத்துங்க..!!

வெந்தயக்களி செய்ய தேவையான பொருட்கள்:

பச்சரிசி                     – 50 கிராம்
உளுந்து                    – 50 கிராம்
வெந்தயம்               – 50 கிராம்
கருப்பட்டி               – 2 துண்டுகள்
நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் எடுத்து, மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் நன்கு ஊற வைத்து கொள்ளவும். பின்பு மிக்சிஜாரில் உற வைத்த மூன்றையும் போட்டு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

மேலும் அடுப்பில் கடாயை வைத்து,அதில்  உற வைத்து அரைத்த கலவையை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அதனுடன் கருப்பட்டியை துகளாக இடித்து, அதில் போட்டு பாகு காய்ச்சி போல், நன்கு கெட்டியாகுவதற்கு இடையிடையே கரண்டியால் கிண்டி விட்டு,ஓரளவு கெட்டியாகும் போது சிறிது  நல்லெண்ணெயை ஊற்றி கிளறி விடவும்.

பிறகு கிளறி விட்ட கலவையானது,  ஒட்டாமல் கெட்டியான பதம் வந்ததும், இறக்கி ஆறவைத்து உருண்டைகளாக உருட்டி, இரவு சாப்பாட்டுக்கு பின் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்து வரலாம்

Categories

Tech |