வீட் ஃபலூடா செய்ய தேவையான பொருள்கள் :
கோதுமை மாவு – அரை கப்,
வெனிலா ஐஸ்கிரீம் – 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் – 1 டீஸ்பூன்,
மாம்பழக் கூழ் – 1 டேபிள்ஸ்பூன்
மிக்ஸட் ஃப்ரூட் ஜாம் – 1 டேபிள்ஸ்பூன்
வேஃபர் பிஸ்கட் – 2,
பொடித்த முந்திரி – 1 டீஸ்பூன்,
பொடித்த சர்க்கரை – 3 டீஸ்பூன்,
ஐஸ் கட்டிகள் – 10,
பச்சை ஃபுட் கலர் – 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் பாத்திரத்தில் கோதுமை மாவுடன், சிறிதளவு நீர் சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து, இரண்டு கப் நீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
பின்பு, அடுப்பை லேசான தீயில் வைத்தபின்பு, முறுக்கு அச்சியை எடுத்து அதில் கெட்டியாக பிசைந்த மாவை, கொதிக்க வைத்த தண்ணிரில், நூடுல்ஸ் போல பிழிந்து போடவும், பின்பு வெண்ணெய் சிறிது சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
அதனை அடுத்து, நீரில் வெந்த கோதுமை மாவை வடிகட்டிஎடுத்து அதன் மேல் ஐஸ் கட்டிகளை போட்ட பின்பு அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். மேலும் ஒரு பெரிய கண்ணாடி கிளாஸை எடுத்து முதலில் வடிகட்டிய கோதுமை மாவை ஒரு டேபிள்ஸ்பூன் அளவுக்கு சேர்க்கவும்.
பின்பு அதன்மேல் ஒரு டீஸ்பூன் அளவுக்கு சர்க்கரையை தூவவும். அதற்கு பின்பு,அதில் ஃப்ரூட் ஜாம் இரண்டு டீஸ்பூன் ஊற்றி, பின்பு அதற்கு மேல் மாம்பழக்கூழ் சேர்த்து, மறுபடியும் அதன்மேல் ஒரு டீஸ்பூன் சர்க்கரை தூவிக் கொள்ளவும்.
அதன்மேல் வெனிலா ஐஸ்க்ரீமை சேர்த்து, அதனுடன் சிட்டிகை பச்சை ஃபுட் கலர் சேர்க்கவும். இறுதியில், அதில் முந்திரிப் பொடியை தூவி, வேஃபர் பிஸ்கட் வைத்தால் ருசியான வீட் ஃபலூடா தயார்.