Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கெட்ட கொலஸ்ராலை குறைக்கணுமா ? கவலையே வேண்டாம்… இதோ எளிய ரெசிபி..!!

கோதுமை ரவை கேரட் புட்டு செய்ய தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை    – 1 கப்
கேரட்                           – 2
தேங்காய்                   – ½ கப் துருவியது
வெல்லம்                   – ½ கப் துருவியது
ஏலப்பொடி                – 1 சிட்டிகை
உப்பு                             – 1 சிட்டிகை.

செய்முறை:
முதலில் கேரட்டையும், தேங்காயையும் தனித்தனியாக துருவி எடுத்து கொள்ளவும். பின்பு வெல்லத்தையும் ஒரு பாத்திரத்தில் தனியாக துருவி எடுத்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் அகலமான வாணலியை வைத்து, அதில் கோதுமை ரவையை போட்டு லேசாக பச்சை வாசனை போகும் வரை வறுத்து எடுத்து, சிறிதளவு  தண்ணீர் தெளித்து வைக்கவும்.

அதன் பின்பு அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து, அதில் வறுத்த கோதுமை ரவையுடன், கேரட் துருவலைக் போட்டு, தேவையான அளவு உப்பு தூவி, நன்கு கலந்து கெட்டியாக பிடித்து நன்கு வேக வைக்கவும்.

பிறகு வேக வைத்த கோதுமை ரவை கலவையானது நன்கு வெந்ததும் இறக்கி வைத்து அதை கட்டிகள் இல்லாதவாறு நன்றாக உதிர்த்து கொள்ளவும்.

மேலும் உதிர்த்து வைத்த கலவையில் ஏலக்காய் பொடி, துருவி வைத்த தேங்காய் துருவல், துருவிய வெல்லம் சேர்த்து நன்கு கலந்தபின் பரிமாறினால், ருசியான கோதுமை ரவை கேரட் புட்டு தயார்.

Categories

Tech |