கோதுமை மாவு – ஒரு கப்
கேழ்வரகு மாவு – அரை கப்
பாதாம் – 4
முந்திரி – 10
பொட்டுக்கடலை – அரை கப்
நெய் – தேவையான அளவு.
நாட்டு சர்க்கரை – தேவையான அளவு.
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து அதில் கோதுமை மாவையும், கேழ்வரகு மாவையும் தனித்தனியாக போட்டு, மாவின் பச்சை வாசனை போகும் வரும் வரை நன்கு வறுத்து எடுத்து கொள்ளவும்.
பின்பு அதே வாணலியில் பொட்டுக் கடலையை போட்டு, லேசாக வறுத்து எடுத்து ஆற வைத்து, மிக்ஸிஜாரில் போட்டு மையாக அரைத்து, சலிப்பு அரிப்பால் சலித்து எடுத்து கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து அதில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பாதாம், முந்திரியை சிறு துண்டுகளாக உடைத்து போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். மேலும் மிக்சிஜாரில் நாட்டு சர்க்கரையை போட்டு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
பின்னர் ஒரு பவுலை எடுத்து, வறுத்த கோதுமை மாவு, கேழ்வரகு மாவு, அரைத்த பொட்டு கடலை மாவு, வறுத்த பாதாம், முந்திரி பருப்பு, ருசிக்கேற்ப அரைத்த நாட்டு சர்க்கரை தூளை சேர்த்து நன்கு கிளறி கெட்டியாக பிசைந்து உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி சூடானதும், உருண்டைகளாக உருட்டிய கலவையை போட்டு சிறிது பிரட்டி எடுத்து பரிமாறினால் ருசியான கோதுமை – கேழ்வரகு உருண்டை ரெடி.