கோதுமை மாவு – ஒன்றரை கப்,
சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன்,
கெட்டியான நெய் – அரை கப்
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்,
சமையல் சோடா – கால் டீஸ்பூன்
சர்க்கரை – ஒரு கப்,
தண்ணீர் – அரை கப்,
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் சர்க்கரையும், தண்ணீரும் சேர்த்துக் கொதிக்கவிட்டு பாகு காய்ச்சி கம்பி பதம் வந்தவுடன் இறக்கி கொள்ளவும்.
பின்பு, பாத்திரத்தில் கோதுமை மாவு, சோள மாவு, நெய்யைச் சேர்த்து, கையால் உதிரி யாக வரும் வரை பிசைந்து கொள்ளவும்.
அதனையடுத்து சிறிய பாத்திரத்தில் தயிர், சமையல் சோடா சேர்த்து நுரைக்க பொங்கும் வரை அடித்து, அதை உதிரியாக பிசைந்து வைத்த மாவுடன் கலந்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு கெட்டியாக பிசைந்து எடுக்கவும்.
மேலும்பிசைந்து வைத்த மாவை எடுத்து சிறு உருண்டைகளாக நன்கு உருட்டி எடுத்து, அதை உள்ளங்கையில் வைத்து அழுத்தி விட்டு, விரலால் நடுவில் சிறிது அழுத்தி எடுத்து கொள்ளவும்.
பின்பு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் பொரிக்கும் அளவுக்கு எண்ணெயை ஊற்றி சூடானபின்பு,அதில் போட்டு பொரித்து எடுத்து, சர்க்கரைப் பாகில் சேர்த்து ஊறவைத்து எடுத்தால் சுவையான கோதுமை பாதுஷா ரெடி.