கோதுமை ரவை உப்புமா செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
வரமிளகாய் – 2
இஞ்சி – சிறிது
கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பெரிய வெங்காயம், தக்காளி, இஞ்சியை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து சூடானதும், கோதுமை ரவையை போட்டு அதன் பச்சை வாசனை போகும் வரை லேசாக வறுத்து எடுத்து கொள்ளவும். பின்பு மிக்சிஜாரில் இஞ்சியை போட்டு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
பிறகு அதே தவாவை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு சேர்த்து தாளித்ததும், லேசாக பொருங்காயத்தூளை தூவியபின், வரமிளகாயை கிள்ளிப் போட்டு, அரைத்த இஞ்சியை போட்டு நன்கு கிளறி விடவும்.
மேலும் கிளறிவிட்ட இஞ்சியில், நறுக்கிய வெங்காயம், தக்காளியை போட்டு நன்கு வேகும் அளவுக்கு வதக்கியபின், அதில் தேவைக்கேற்ப தண்ணீரை ஊற்றியபின், ருசிக்கேற்ப உப்பு தூவி நன்கு கொதிக்க விடவும்.
அடுத்து தண்ணீர் நன்கு கொதித்ததும், அதில் வறுத்த கோதுமை ரவையை சேர்த்து, நன்கு கிளறி விட்டபின், மூடி வைத்து நன்கு கொதிக்க வைத்து வேக விடவும்.
வேக வைத்த கோதுமை ரவையானது, நன்கு வெந்து தண்ணீர் வற்றி, அடியில் பிடிக்காதவாறுநன்கு கிளறி இறக்கி விட்டபின் இறக்கி வைத்து சூடாக பரிமாறினால் ருசியான கோதுமை ரவை உப்புமா தயார்.