Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

எல்லா சாதத்துக்கும் ஏற்ற… சுவையான சத்து நிறைந்த சைடிஸ்..!!

பீட்ருட் பொரியல் செய்ய  தேவையான பொருள்கள்:

பெரிய  பீட்ரூட்               –1
பெரிய வெங்காயம்     – 1
பச்சை மிளகாய்             – 2
சர்க்கரை                           – 2 டீஸ்பூன்
கடுகு                                   – சிறிதளவு
உளுத்தம்பருப்பு            – சிறிதளவு
காய்ந்த மிளகாய்          – தேவையான அளவு
கறிவேப்பிலை              – தேவையான அளவு
எண்ணெய்                       – தேவையான அளவு
உப்பு                                    – சிறிதளவு

செய்முறை:

முதலில் பீட்ரூட், பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை எடுத்து  பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு அடுப்பில் குக்கரை வைத்து, அதில் நறுக்கிய பீட்ரூட், பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு சேர்த்து சிறிதளவு  தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு,அடுப்பில் கடாயை வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்பு அதனுடன் வேக வைத்து எடுத்த பீட்ரூட் கலவையை சேர்த்து நன்கு வேக வைத்து, தண்ணீர் நன்கு வற்றியதும், அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து, நன்கு கெட்டியாகும் வரை வதக்கியபின்,  இறக்கி பரிமாறினால் சுவையான பீட்ருட் பொரியல் தயார்.

Categories

Tech |