நாட்டுக்கோழி வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:
நாட்டுக்கோழி — 1/2 கிலோ
சின்னவெங்காயம் — 1 கப்
பச்சை மிளகாய் — 2
சீரகம் — 1/2 டீஸ்பூன்
இஞ்சிப்பூண்டு பேஸ்ட் — 1 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தூள் — 1 டீஸ்பூன்
சாம்பார்த்தூள் — 1 டீஸ்பூன்
தக்காளி — 2
சிக்கன் மசாலாத்தூள் — 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் — 1 டீஸ்பூன்
தயிர் ஆடை — 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் பாத்திரத்தில் நாட்டு கோழியை எடுத்து, அதை சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின்பு சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
அதன் பின்பு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கி, தக்காளியைபோட்டு வதக்கவும்.
மேலும் அதனுடன் நறுக்கிய கோழி துண்டுகளை போட்டு, அதில் உப்பு, மஞ்சள்தூள், இஞ்சிப்பூண்டு பேஸ்ட், சாம்பார் தூள், சிக்கன் மசாலா தூள்,நன்கு வதக்கவும்.
பின்பு அதனுடன் தயிர் ஆடையை சேர்த்து நன்கு கலந்து, சுடு தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்து, இறக்கும்போது மிளகுத்தூள் சேர்த்து சிறிது கிளறி இறக்கினால் சுவையான நாட்டு கோழி வறுவல் ரெடி.