Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த… பத்து நாளானாலும் கெட்டு போகாத… ருசியான ஊறுகாய் செய்து அசத்துங்க..!!

நெல்லிக்காய் ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்:

பெரிய நெல்லிக்காய்    – 21
வத்தல்                                – 20
கல் உப்பு                              – 50 கிராம்
நல்லெண்ணெய்             – 50 கிராம்
கட்டி பெருங்காயம்       – சிறு துண்டு
கடுகு                                     – 1 அரை  டிஸ்பூன்
வெந்தயம்                          – 2 டிஸ்பூன்

செய்முறை:

பெரிய நெல்லிக்காயை தண்ணீர் விட்டு நல்ல கழுவி, துணியால் தண்ணீர் இல்லாமல் நல்ல துடைச்சு, அடுப்பில் இட்லி பாத்திரத்த வச்சி, தொடச்ச நெல்லைகாய போட்டு  15 லிருந்து 20 நிமிடம் வர வேக வைச்சி எடுத்து ஆற வச்சுக்கணும்.

அடுப்பில வாணலிய வச்சி சூடானதும், வெறும் சட்டில வெந்தயத்த போட்டு நல்ல வறுத்து சிவக்க ஆரம்பிச்சதும் இறக்கி ஒரு முடியில தட்டி வச்சிட்டு, அதே வாணலிய அடுப்பில வச்சி நல்லெண்ணெயில் கால் வாசி மட்டும் ஊற்றி, கட்டி பெருங்காயத்தை போட்டு நல்ல பொறிஞ்சி வாசனை வந்ததும் இறக்கி, முடியில தட்டி ஆற வைக்கணும்.

பிறகு வத்தல் காம்ப கிள்ளி எடுத்து, வறுத்த வெந்தயம், பொறிஞ்ச கட்டி பெருங்காயத்த மிக்சிஜாரில போட்டு நல்ல கொரகொரப்பா அரைச்சி எடுத்துக்கிடனும்.

ஆற வச்ச நெல்லிக்காய எடுத்து கையாலே விதையை தனியா எடுத்து உதிர்த்து கிடனும். அதற்கு பிறகு அடுப்பில கடாயை வச்சி நல்லெண்ணெய ஊற்றி, உதிர்த்து வச்ச நெல்லிக்காய போட்டு இந்த எண்னெயில நல்லா வதக்கனும்.

மேலும் நெல்லிக்கா நல்லா வதங்கின பிறகு, அதுல கல் உப்பு போட்டு முடிவச்சி 10 நிமிடமாவது நல்ல வதக்கின பிறகு, அரைச்சி வச்ச மசாலாவ சேர்த்து நல்லா வதக்கினபிறகு,  உப்பு ருசி பார்த்தபிறகு நல்ல வதக்கியதும் இறக்கி வச்சி சாதத்துடன் பரிமாறினால் சுவையான நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி.

குறிப்பு :

இந்த நெல்லிக்காய் ஊறுகாய சில்வர் பாட்டிலில் வைக்காமல், கண்ணாடி பாட்டிலில் போட்டு 10 நாட்கள் மேல் வைத்து பரிமாறிக் கொள்ளலாம்.

 

 

Categories

Tech |