Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தோசை,சப்பாத்திகளுக்கு ஏற்ற… ருசியான சைடிஸ்..!!

முள்ளங்கி சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

முள்ளங்கி                              – அரை கிலோ
பெரிய வெங்காயம்           – ஒன்று
காய்ந்த மிளகாய்                – 3
தக்காளி                                   – 1
கறிவேப்பிலை                     – 1 கைபிடி
புளி                                             – சிறிதளவு
உளுத்தம் பருப்பு                 – சிறிதளவு
பூண்டு                                       – 6 பல்
கடுகு                                          – சிறிதளவு
எண்ணெய்                              – சிறிதளவு

செய்முறை:

முதலில் முள்ளங்கியை எடுத்து தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின்பு தக்காளி, பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாயை எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பின்பு அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய முள்ளங்கி, தக்காளி, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பூண்டை   சேர்த்து நன்கு வதக்கியபின் இறக்கி வைக்கவும்.

அதன் பின்பு மிக்சிஜாரில் வதக்கிய கலவையை போட்டு சிறிது உப்பு, புளி சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.

பிறகு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்ததும்   அரைத்து வைத்த கலவையை போட்டு, நன்கு கிளறி பச்சை வாசனை போகும் வரை வதக்கியபின், இறக்கி பரிமாறினால் ருசியான முள்ளங்கி சட்னி தயார்.

Categories

Tech |