ஸ்வீட் பிரெட் டோஸ்ட் செய்ய தேவையான பொருள்கள்:
பிரெட் – 6 ஸ்லைஸ்,
மைதா – 2 டீஸ்பூன்,
பால், சர்க்கரை,எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் மைதா மாவு, சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து கெட்டியாக கலக்கி கொள்ளவும்.
அதன்பின் கலக்கி வைத்த மைதா மாவுடன் பிரெட்டை நனைத்து எடுத்து, தோசைக் கல்லை அடுப்பில் வைத்து அதில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, திருப்பிப் போட்டு, இரண்டு பக்கமும் பொன்னிறமானதும் எடுத்தால் சுவையான ஸ்விட் பிரட் ரோஸ்ட் தயார்