திரட்டுப்பால் செய்ய தேவையான பொருட்கள் :
வெண்ணெய் நிறைந்த பால் – 1 லிட்டர்
நெய் – 10௦ கிராம்
சர்க்கரை – 200 கிராம்
ஏலப்பொடி – சிறிதளவு
செய்முறை :
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடும்போது அடுப்பை மிதமான தீயில் எரிய வைத்து கரண்டியால் கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.
பின்பு கொதிக்கின்ற பாலானது திக்காக நிறைய ஏடு சேர்ந்து கெட்டியாக திரைந்து, வரும்பொது, அதில் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கி கொண்டே இருந்தால் பால் திரண்டு ஒன்றாக சேர்ந்து வரும்
அதனுடன் நெய், ஏலக்காய் தூள் சேர்த்து, கிளறி ஒரு கிண்ணத்தில் நெய்யை தடவி அதில் திரண்ட பாலை சேர்த்து, முந்திரி பருப்பு அல்லது பாதம் பருப்பு தூவி பரிமாறினால் சுவையான திரட்டுப்பால் ரெடி.