Categories
லைப் ஸ்டைல்

தீபாவளி ஸ்பெஷல்… இனிப்பு சீடை ரெசிபி…!!!

இனிப்பு சீடை செய்ய தேவையான பொருட்கள்:

பச்சரிசி மாவு                        – 1  1/2 கப்
தேங்காய் துருவியது        – 1/2 கப்
கருப்பு வெல்லம்                  – 1 கப்
கருப்பு, வெள்ளை எள்        – 1/2 கப்
எண்ணெய்                                – வறுக்க
நெய்                                             – 2 ஸ்பூன்

செய்முறை:

அடுப்பில்  வாணலியை வைத்து அதில், அரிசி மாவை போட்டு  சிவக்காமல் வறுத்து எடுத்து  கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து, அதில் வெல்லம் சேர்த்ததும், தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து பாகு காய்ச்சி எடுத்து கொள்ளவும்.

பின்பு அதே வாணலியில்  உளுந்தை போட்டு  பொன்னிறமாக வறுத்தப்பின் மிக்சிஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்

மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவையும், உளுந்து மாவையும் சேர்த்து  கலந்து  நன்கு  சலித்துக்  கொள்ளவும்

பின்பு  அதனுடன்  எள்ளு, தேங்காய் துருவல், சிறிது நெய் ஊற்றி  அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கவும்

பின் வெல்லத்தினால் செய்த பாகை, கலந்து வைத்த மாவில் சிறிது சிறிதாக ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்.
மேலும் பிசைந்து வைத்த மாவில் சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்த உருண்டைகளை 10 நிமிடம் அப்படியே வைக்கவும்
அதனையடுத்து அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அடுப்பை  மிதமான தீயில் வைத்து, உருட்டிய உருண்டைகளை கொதிக்கின்ற எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான இனிப்பு சீடை ரெடி.

Categories

Tech |