ப்ரோக்கோலி – 1 1\2 கப்
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
பெருங்காயப் பொடி – 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா – 1\4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
பெருங்காயப் பொடி – 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா – 1\4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
ப்ரோக்கோலியை எடுத்து சுத்தம் செய்தபின், பூக்களாகப் பிரித்து, சிறிதாக வெட்டி, அதை சூடான நீரில், சில நிமிடங்கள் வெட்டிய ப்ரோக்கோலியை போட்டு ஊற வைக்கவும்.
பின்பு பாத்திரத்தில், கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு கலந்ததும் தண்ணீரை ஊற்றி பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
மேலும், கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரித்தெடுக்கும் அளவுக்கு எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் சிறியதாக வெட்டிய ஒவ்வொரு ப்ரோக்கோலி பூவை கரைத்த மாவில் நனைத்து, சூடான எண்ணெயில் போட்டு நன்கு பொரிக்கவும்.
பின்பு எண்ணெயில் நன்கு பொரித்த ப்ரோக்கோலியை எடுத்து சூடாக பரிமாறினால் சுவையான ப்ரோக்கோலி பகோடா ரெடி.