Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வாழைப்பழ கட்லெட்… செய்து அசத்துங்க..!!

வாழைப்பழ கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்:

வாழைப்பழம்                                        – 2
சிவப்பு அவல்                                         – அரை கப்
வேர்க்கடலை                                         – கால் கப்
நாட்டு சர்க்கரை                                     – கால் கப்
ஏலக்காய் தூள்                                        – சிறிதளவு
நெய்                                                              – சிறிதளவு

செய்முறை:

முதலில் இட்லி தட்டை அடுப்பில் வைத்து, அதில் வாழைப்பழத்தை நன்கு வேக வைத்து கொள்ளவும்.

பின்பு, அடுப்பில் கடாயை வைத்து, அதில் சிவப்பு அவலை போட்டு, வாசனை வரும் வரை வறுத்து, அதனுடன் தண்ணீர் ஊற்றி,  ஊறவைத்தபின் பிழிந்து வைத்து கொள்ளவும்.

மேலும், அடுப்பில் கடாயை வைத்து, அதில் வேர்க்கடலையை போட்டு வறுத்து எடுத்து ஆற வைக்கவும். பிறகு  மிக்சிஜாரில் வறுத்த வேர்க்கடலையை போட்டு பரபரப்பாக  அரைத்து எடுக்கவும்.

அதனையடுத்து பாத்திரத்தில் வேக வைத்த வாழைப்பழத்தின்  தோலை  நீக்கி எடுத்து பின்பு அதனுடன் பொடித்த வேர்க்கடலை, ஊற வைத்த அவல், நாட்டு சர்க்கரை, ஏலக்காய் தூளை சேர்த்தவுடன்  நன்கு கெட்டியாக கலந்து தேவையான வடிவில் பிடித்து வைக்கவும்.

அடுப்பில் தோசை கல்லை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றியபின்  காய்ந்ததும், செய்து வைத்த கலவையை  வைத்ததும், ஒருபுறம் பொன்னிறமாக வெந்ததும், மறுபுறம் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்தால் சுவையான சத்தான வாழைப்பழ கட்லெட் ரெடி.

Categories

Tech |