இந்த தூதுவளை சூப்பை அடிக்கடி செய்து குடிப்பதால் உடம்பில் உருவாகும் சளி, இருமல், ஆஸ்துமா போன்றவற்றிலிருந்து விடுபடவும், இதை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடம்பிற்கு நல்ல வலிமை சேர்க்கவும் உதவுக்கிறது. தூதுவளையில் அதிகம் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால், இது எலும்புக்கும், பற்களுக்கும் ரொம்ப நல்லது தரக்கூடியதாக இருக்கிறது. வாய், தொண்டைகளில் உருவாகும் புற்றுநோய்களை தடுக்கவும் உதவுகிறது.
தூதுவளை சூப் செய்ய தேவையான பொருட்கள்:
தூதுவளை கீரை – 1 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
உப்பு, மஞ்சள் தூள் – தேவைக்கேற்ப
பூண்டு – 15 பல்
மிளகு – அரை ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை:
தூதுவளை இலையை எடுத்து அதிலுள்ள காம்புகளையும், முட்களையும் நீக்கியபிறகு, தண்ணீர்ல நல்லா கழுவி எடுத்துக்கிடனும். பிறகு அடுப்புல கடாயை வச்சி, லேசாக எண்ணெய் ஊற்றி சூடேறியதும், சீரகம் மிளகு, பூண்டை போட்டு நல்லா வதக்கியதும், வெங்காயத்தை போட்டு வதக்கிக்கணும்.
பின்னர் வெங்காயம் வதங்கியதும், பச்சை மிளகாயை போட்டு, நறுக்கி வச்ச தக்காளிய போட்டு நல்லா வேகுற அளவுக்கு வதக்கினபிறகு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி விட்டபின், கழுவி வச்ச தூதுவளையை போட்டு வதக்கி இறக்கி ஆற வச்சிக்கணும். மேலும் ஆற வச்ச கலவையை, மிக்சிஜாரில் போட்டு நல்லா மையாக பேஸ்ட் போல அரைச்சி எடுத்துக்கணும்.
அடுத்து கடாயை அடுப்புல வச்சி, லேசாக எண்ணெய் ஊற்றி சூடேறியதும், அரைச்சி வச்ச கலவையை போட்டு, தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி, ருசிக்கேற்ப உப்பு தூவி, நல்லா கொதிக்க வந்து, வாசனை வந்தபிறகு, கொத்தமல்லி இலையை தூவிவிட்டதும், இறக்கி வச்சி சூடாக பரிமாறினால் ருசியான தூதுவளை சூப் ரெடி.