செம்பருத்தி பூ மற்றும் இலையில் மறைந்து இருக்கிற அற்புத மருத்துவ குணம் பற்றிய தொகுப்பு:
செம்பரத்தை அல்லது செம்பருத்தி என்றும் கூறுவார்கள். அதன் இலை, பூ, வேர் ஆகியவை மருத்துவ குணம் வாய்ந்தவை.
செம்பருத்தி இலை அல்லது பூவை அரைத்து சாற்றெடுத்து, அதனுடன் சமஅளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து, நீர் சுண்டும் வரை எரித்து காய்ச்சி, அதனை தினமும் தலையில் தடவி வர உடல் குளிரும், தலை முடியும் கருமையாக வளரும்.
செம்பருத்தி பூவின் மகரந்த காம்புகளை தனியே எடுத்து நன்கு உலர்த்தி பொடியாக்கிக் கொள்ளவும். அதனை ஒரு வேலைக்கு இரண்டிலிருந்து நான்கு கிராம் எடுத்து, பாலில் கலந்து குடித்து வர உடல் புஷ்டியாகும். மேலும் ஆண்மையை பெருக்கும் அற்புதமான மருந்தாகவும் அமையும்.
செம்பருத்தி பூ மொட்டுகளை நிழலில் உலர்த்தி இடித்து, சாப்பிட்டு வர ஆண்மை பெருகும். சிறுநீர் எரிச்சலயும் தணியும் குணம் உள்ளது.
செம்பருத்தி பூவை உலர்த்திப் பொடித்து, அதனுடன் சமஅளவு மருதம் பட்டைத் தூள் கலந்து பாலுடன் காலை மாலை பருகி வர இருதய பலவீனம் தீரும்.
செம்பருத்தி இலையை நீரிலிட்டு காய்ச்சி குடித்துவர, வெள்ளை நோய் தீரும். செம்பருத்திக்கு, ஒரு பெண்ணை வயதுக்கு வர செய்யும் சக்தி உள்ளது. தகுந்த வயது வந்தும் பருவம் அடையாத பெண்களுக்கு இதை எந்த வகையிலாவது உட்கொடுத்து வர அவர்கள் கூடிய விரைவில் பருவம் அடைவார்கள்.