Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தெய்வீக மூலிகை…எருக்கன் செடியின்…மருத்துவ குணங்கள்…!!

எருக்கம் பூ மற்றும் இலைகள் அளிக்கும் மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு:

எருக்கு இரண்டு வகைப்படும். அதில் வெள்ளை மலர்களை கொண்ட வெள்ளை எருக்கே மருத்துவ குணம் கொண்டது. அது விஷத்தன்மை கொண்டது.

பாம்பு கடித்தவர்க்கு, புன்னைக்காய் அளவு எருக்கு இலையை அரைத்து உடனே கொடுக்கலாம். தேள் கடிக்குச் சுண்டைக்காயளவு கொடுத்து கடிவாயில் வைத்துக் கட்டலாம்.

எருக்குகின் நல்ல முக்கிய இலையுடன், மூன்று துளி துளசிச் சாறு, பத்து துளி தேன் கலந்து கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியாகும்.

நன்றாக நெருப்பில் சுட்ட சூடான செங்கல் மீது, எருக்குவின் பழுப்பு இலைகள் மூன்றை வைத்து அதன் மீது பாதிக்கப்பட்ட குதிகாலை 5 நிமிடங்கள் வரை வைக்க வேண்டும். மூன்று நாட்கள் அவ்வாறு செய்து வந்தால் குதிங்கால் வாதம் குணமாகும்.

எருக்கம் இலையை உலர்த்தி பொடியாக்கி அதை விளக்கு எண்ணெய் சேர்த்து நாள்பட்ட புண் மீது தடவி வர அந்த புண் விரைவில் குணமாகிவிடும்.

நன்கு முதிர்ச்சி அடைந்த எருக்கண் செடியில் இருந்து பழுப்பான இலைகளை சேகரித்து, அதனை அனலில் வதக்கி சாறு பிழிந்து அதனுடன் சிறிதளவு சுண்ணாம்பு மற்றும் தேன் கலந்து நன்றாக குறைத்து கொள்ளவேண்டும்.

அந்த கலவையை, வெளி உபயோக பூசு மருந்தாக கட்டிகள் மீது உபயோகித்தால், கட்டிகள் பழுத்து சீக்கிரமாக உடைந்து ஆறிவிடும்.

Categories

Tech |