“கடுகு சிறுத்தாலும் அதன் காரம் குறையாது” என்பதற்கு இணங்க கடுகின் மருத்துவ குணங்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
தலைவலியில், ஒற்றை தலைவலி மிகவும் பயங்கரமான தொல்லையை கொடுக்கும். அதற்கு கடுகு 20 கிராம், சிறிது தண்ணீர் விட்டு அரைத்து நெற்றியில் தடவி வர ஒற்றை தலைவலி நீங்கிவிடும்.
நீர்க்கடிப் பிரச்சனை (பி.ஸி.ஓ.டி) யால் இன்சுலின் (சர்க்கரை அளவு) சுரப்பையும் குறைத்து விடும். அதற்கு தீர்வாக தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு பொடியை வெறும் தண்ணீர் அல்லது மோர் சூப்பில் சேர்த்துச் சாப்பிடலாம்.
உங்கள் சருமத்தை பருவநிலை மாற்றத்திலும் ஈரப்பதத்துடன் வைத்து பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியம். அதற்கு அதிக அளவில் கடுகு உதவும்.
சருமத்திற்கு, ஈரப்பதம் அளிப்பதுடன், அழுக்குகளையும் நீக்கி பருக்களில் இருந்து பாதுகாக்க கடுகு பெருதும் உதவும். கடுகில் அடங்கியுள்ள anti-inflammatory மூலக்கூறுகள் உடலில் வீக்கத்தை குறைகிறது.
வயது முதிர்வு தோற்றம் என்பது ஒவ்வொருவருக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாகும். அனால் கடுகை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் முதுமையைத் தோற்றதை சரி செய்யும். கடுகில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்து காணப்படுவதால், வயதாகும் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.
விஷக்கடி உடனே குறைய, கடுகுடன், 2 கப் நீர் விட்டு அரைத்துக் கொடுத்தால் விஷத்தின் தாக்கம் கட்டுப்படும். தேனுடன் கடுகை அரைத்து கொடுத்தால் ஆஸ்துமா, கபம் குணமடையும்.
கடுகு மற்றும் மஞ்சள் சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி அதனை வடிகட்டிக் காதில் சில சொட்டுக்கள் விட்டு வர தலைவலிக்கு உடனே நிவாரணம் கிடைக்கும்.
வெந்நீரில் கடுகை ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல், ரத்த அழுத்தம் கட்டுப்படும். கடுகில் உள்ள பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் பி6 போன்றவை அதிகம் உள்ளதால் உடலுக்கு அதிக நன்மை ஏற்படும்.