Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புலாவ் கொத்துக்கறி…அட்டகாசமான சுவையில்…!!

புலாவ் கொத்துக்கறி செய்ய தேவையான பொருள்கள்:  

பிரியாணி அரிசி                              – 500 கிராம்
ஆட்டுக்கறி                                          – 500 கிராம்
மிளகாய் பொடி                                – சிறிதளவு
கரம் மசாலா பொடி                       – சிறிதளவு
நெய்                                                        – 50கிராம்
இஞ்சி, பூண்டு                                     – 50 கிராம்
சீரகம்                                                      – சிறிதளவு
ஏலக்காய், கிராம்பு, பட்டை        – சிறிதளவு
தக்காளி                                                 – 4

செய்முறை:

முதலில் அரிசியை ஊற வைத்து எடுத்து கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றி ஊறவைத்த அரிசியை போட்டு 1 க்கு 2 வீதம் தண்ணீர் ஊற்றி புலாவ் செய்து கொள்ளவும்.

ஆட்டு கறியை சுத்தம் செய்து  சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய்  ஊற்றி காய்ந்ததும்  சீரகப் பொடி, இஞ்சி, பூண்டு, வெங்காயம், மிளகாய் பொடி, தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளவும்.

பின்னர் வதக்கி வைத்த கலவையுடன் சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்த கறியையும், சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். அதனுடன் தயாரித்து வைத்த புலாவயும் சேர்த்து கிளறி பரிமாறினால் சுவையான புலாவ் கொத்துக்கறி ரெடி.

Categories

Tech |