நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதினால் ஏற்படும் நன்மைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
பாரம்பரியங்களில் ஒன்று, வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தல். ஆயுர்வேத முறைகளில் இதுவும் ஒன்று எனலாம். நல்லெண்ணெய் வைத்து தான் எண்ணெய் குளியல் செய்யனும் என்பது ஒரு ஐதீகமாகவே உள்ளது. அதில் குறிப்பாக ஆண்கள் சனிக்கிழமையிலும், பெண்கள் வெள்ளிக்கிழமையிலும், நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். மேலும் நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ளும் போது, அந்த நல்லெண்ணெயில் பூண்டு, மிளகு, சீரகம் மற்றும் சுக்கு ஆகியவற்றை சேர்த்து, வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அந்த நல்லெண்ணெயை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தேய்த்து குளிக்கவும்.
இந்த முறையெல்லாம் அக்காலத்தில் நம் முன்னோர்கள், பெற்றோர்கள் எல்லாம் தவறாமல் பின்பற்றி வந்திருந்தார்கள். ஆனால் இப்போது, அந்த பழக்கமெல்லாம் மறைந்துவிட்டது. இதனால் தான் என்னவோ இன்றைய சந்ததியினருக்கு நோய்கள் அதிகம் வருகிறது. எனவே நீங்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ, வாரம் ஒருமுறையாவது நல்லெண்ணெய் குளியல் எடுத்து வாருங்கள். இப்படி எடுப்பதால், நோய்களின் தாக்கம் குறைவதோடு, கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும். இங்கு வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிடப்பட்டுள்ளன.