ஊமத்தையில் இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்டுள்ளதை அறிய, இந்த செய்தித் தொகுப்பை காணலாம்:
ஊமத்தைதையில் வெள்ளை ஊமத்தை, கருவூமத்தை பொன்னூமத்தை, அடுக்கு ஊமத்தை, மருளுமத்தை என பல வகைகள் உள்ளன. கருவூமத்தை எனப்படும் அடர் நீலநிற பூ கொண்ட ஊமத்தையே சிறந்த மருத்துவ குணம் கொண்டது.
ஊமத்தை இலைச் சாற்றை தனியாகவோ அல்லது சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சியோ காதில் 1-2 துளி விட்டு வர காதுவலி குணமாகும்.
ஊமத்தை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, ஐம்பதிலிருந்து நூறு மில்லி கிராம் அளவு இருவேளை உட்கொண்டு வர இரைப்பு என்னும் ஆஸ்துமா தீரும்.
ஊமத்தை இலை சாற்றுடன் வெப்பெண்ணெய் சேர்த்து காய்ச்சி மூட்டு வலிக்குத் தடவி வர அந்த வலி தீரும்.
ஊமத்தை இலையை இடித்து சாறு பிழிந்து சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி தைலம் செய்து ஆறாத புண், புரையோடிய புண், படுக்கைப்புண் ஆகியவற்றிற்குப் தடவி வர அவை விரைவில் குணமாகும்.
மேற்கண்ட முறையில் தயார் செய்த எண்ணெயுடன் துருசு எனப்படும் மயில் துத்தம் சேர்த்து காய்ச்சப்படும் கலவை பச்சை எண்ணெய் என்று அழைக்கப்படும். அது சாதாரண சிராய்ப்பு முதல் குழிப்புண்கள், அழுகிய ரணங்கள், தீப் புண்களை கூட குணமாகும்.
ஊமத்தை பஞ்சு காயை நன்கு அரைத்து, அதனுடன் உமிழ்நீரை(எச்சில்) கலந்து தலையில் புழு வெட்டு ஏற்பட்ட இடத்தில் பூசி வர அந்த இடத்தில் முடிகள் முளைக்கும்.