Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பைனாப்பிள் thai சிக்கன்… இனிப்பான, சூடான, சுவையான ரெசிபி…!!

பைனாப்பிள் தாய் சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்:

சிக்கன்                                  – கால் கிலோ (வெட்டியது)
முந்திரி                                  – 1/2 கப்
அன்னாசி                             – 2 கப் (நறுக்கியது)
வெஜிடேபிள் ஆயில்       – 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு                                   – 4 பற்கள் (நறுக்கியது)
வெங்காயம்                       – 1 (நறுக்கியது)
மிளகாய்                              – 2 டீஸ்பூன் (நறுக்கியது)
சிவப்பு குடைமிளகாய் – 1/2 (நறுக்கியது)
பச்சை குடைமிளகாய் – 1/2 (நறுக்கியது)
ஆய்ஸ்டர் சாஸ்                – 2 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ்                     – 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை                             – 1 டீஸ்பூன்
வெங்காயத்தாள்             – 3
தேங்காய்                            – 2 டேபிள் ஸ்பூன் (துருவி வறுத்தது)
உப்பு                                      – தேவையான அளவு

செய்முறை:

1/4 கிலோ சிக்கனை  சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். அண்ணாச்சி பழம், வெங்காயம், சிவப்பு குடைமிளகாய், பச்சை குடைமிளகாய், தேங்காய் என அனைத்தையும் தனித்தனியாக வெட்டி எடுத்து கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது வெஜிடபுள் ஆயில் ஊற்றி அதில் முந்திரியை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பூண்டு, வெங்காயம், மிளகாய் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கி, அதனுடன் சிறிய துண்டுகளாக வெட்டி வைத்த சிக்கனை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வேகும் வைக்கவும்.

பின்பு அதனுடன் ஆய்ஸ்டர் சாஸ், சோயா சாஸ், சர்க்கரை, வெட்டி வைத்த அன்னாசி சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விடவும்.

இறுதியில் வறுத்து வைத்த முந்திரி, வெட்டி வைத்த வெங்காயம்  மற்றும் தேங்காயை  மேலே தூவி இறக்கவும். இப்போது சுவையான பைனாப்பிள் தாய் சிக்கன் ரெடி. இதனை சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்.

 

Categories

Tech |