Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தீபாவளிக்கு இன்னும் 1 வாரம்.. இப்போவே செய்து பாருங்க… பூந்தி ரெசிபி…!!!

பூந்தி செய்ய தேவையான பொருட்கள்:

கடலை மாவு                               – கால் கிலோ
நெய்                                                  – சிறிதளவு
கேசரி பவுடர்                                – சிறிதளவு
சீனி                                                    – அரை கிலோ
டால்டா/ ரீபைண்ட் ஆயில்  – தேவையான அளவு

செய்முறை: 

சீனி ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சி இறக்கி வைத்துக் கொள்ளவும்.

கடலை மாவை தண்ணீர் சேர்த்து (கேசரி பவுடரை சிறிது சேர்த்துக் கொள்ளவும்) தோசை மாவு போல் கரைத்து கொள்ளவும்.

வாணிலியில் டால்டா அல்லது நெய்யை காயவைத்து, ஒரு கரண்டி மாவை ஊற்றி தேய்த்து எண்ணெயில் போடவும். எண்ணெயில் விழுந்த மாவு, அதிகம் சிவக்காமல் வெந்ததும் எடுத்து சீனிப் பாகில் போட்டு, சிறிது நேரத்தில் எடுத்து ஒரு பையில் போடவும். அவ்வளவு தான் இப்போது சுவையான பூந்தி ரெடி

Categories

Tech |