Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

potato சீஸ் பால்ஸ்… அதிக சுவை கொண்டது… செஞ்சி பாருங்க…!!

உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் செய்ய தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு                                  – 3
வெங்காயம்                                              – 2
கொத்தமல்லி                                          – சிறிதளவு
கேரட்                                                           – 2
சீஸ்                                                              – 1/2 கப்
கார்ன்                                                          – தேவைக்கேற்ப
மிளகாய் தூள்                                         – 1 தேக்கரண்டி
கரம் மசாலா                                            – 1 தேக்கரண்டி
சோள மாவு                                              – தேவைக்கேற்ப
எண்ணெய்                                                – பொரிப்பதற்கு
உப்பு                                                             – தேவைக்கேற்ப
பிரெட் தூள்                                               – தேவைக்கேற்ப

செய்முறை :

பாத்திரத்தில் கேரட் மற்றும் சீஸை நன்கு  துருவி  தனித்தனியாக எடுத்து  கொள்ளவும். பின்பு வெங்காயம் மற்றும் கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, அதில் உருளைக்கிழங்கை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து அதில் 1/2 கப் கார்னுடன், தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ளவும். பாத்திரத்தில் சோள மாவுடன் சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக  கரைத்து கொள்ளவும்

மற்றொரு  பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வைத்த  வெங்காயம், துருவிய கேரட், துருவிய சீஸ்,வேக வைத்த கார்ன், கொத்தமல்லி,  மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து சிறிய உருண்டைகளாக்கி கொள்ளவும்.

உருட்டி வைத்த உருண்டைகளை, கரைத்து வைத்துள்ள சோள மாவில் நனைத்து,மேலும் அதை  பிரெட் தூளில் பிரட்டி வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் உருண்டைகளை போட்டு  பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும். இப்போது சுவையான உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் தயார். தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.

Categories

Tech |