Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பால் இருக்கா…அப்போ இந்த ரெசிபி செய்து பாருங்க..!!

ரசகுல்லா செய்ய தேவையான பொருட்கள்:

பால்                                                                        -அரை லிட்டர்
எலுமிச்சை சாறு(அ) தயிர்                         – 2 தேக்கரண்டி
சர்க்கரை                                                              –  கப்
தண்ணீர்                                                               – 2-/12 கப்
ஏலக்காய்                                                            – 2
குங்குமபூ                                                            – 2
ஐஸ் கட்டிகள்                                                   – 4 அல்லது  5

செய்முறை:

முதலில் 1/2 லிட்டர் பாலை நீர் சேர்க்காமல் நன்கு கொதிக்க விடவும். பால் கொதிவிடும் நடுவே கரண்டியினால் ஏடு படியாதவாறு கலக்கி கொண்டே இருக்கவும். அதில் சிறிதளவு  எலுமிச்சை சாறு (அ) தயிரை சேர்க்கவும்.

பால் நன்கு திரைந்து நீர் தணியாகவும், பன்னீர் தனியாகவும் மாற ஆரம்பிக்கும் போது ஐஸ் கட்டிகளை பாலில் சேர்க்கவும்.

ஐஸ் கட்டியானது  பன்னீரை மேலும் வேக விடாமல் தடுக்க உதவும். அதனை மேல் மஸ்லின் துணி (அ) மெலிதான காட்டன் துணியை கொண்டு வடிகட்டி தனியாக எடுத்து கொள்ளலாம்.

ஒரு பாத்திரத்தில் வடிகட்டி வைத்த  பன்னீரை எடுத்து  நீரில் நன்கு அலசி  கொள்ளவும். இவ்வாறு செய்வதனால் அதில் ஊற்றிய எலுமிச்சை சாரு (அ) தயிரின் புளித்த சுவையை நீக்கி விடும் .

பின்பு வடிகட்டிய பன்னீரின் ஈரத்தை பிழிந்து எடுத்து அதை துணியில்  மூட்டையாகக் கட்டி 20 நிமிடங்கள் மூடி வைத்து கொள்ளவும் .

நீர் முற்றிலும் நீங்கி பன்னீர் மட்டும் எஞ்சி இருக்கும் நிலையில், அதை எடுத்து சுமார் 10 லிருந்து 15 நிமிடங்கள் வரை கையினால் நன்றாக பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து அதில் தண்ணீர், சர்க்கரை போட்டு கரையும் வரை கொதிக்க வைத்து, அதில் ஏலக்காய்களை முழுதாக சேர்த்து கொதிக்க வைத்தால்,  சீனி பாகு தயாராகிவிடும். அதனை மிதமான சூட்டில்  கொதிக்க விடவும்.

கொதிக்கும் நீரில் ஒவ்வொன்றாக பன்னீர் உருண்டைகளை போட்டு தட்டால் மூடிவிடவும். கடைசி வரை தீயை சீரான, மிதமான சூட்டில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும்.

மேலும் சுமார் 10 ல் இருந்து 15 நிமிடங்கள் வரை சீரான சூட்டில் சர்க்கரை நீர் பன்னீர் உருண்டைகளுடன் கொதிக்க வேண்டும். பின் அடுப்பிலிருந்து இறக்கி நன்றாக ஆறும் வரை மூடியே வைத்திருக்கவும். சிறிது நேரம் கழித்து பரிமாறினால் சுவையான  மிருதுவான ரசகுல்லா ரெடி.

பாத்திரத்தில் இருந்து கப்பில் ஒவ்வொன்றாக எடுத்து வைத்து அதில் மேலே குங்குமப் பூ ஒன்றிரண்டாக தூவி அலங்கரித்து  கொள்ளலாம் . ரசகுல்லாவை ஆறிய நிலையிலோ அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாகவோ சாப்பிடலாம்.

Categories

Tech |