உறவினர்கள் யாருக்காவது ரெட் வெல்வெட் கேக்கினை கொடுக்க விரும்புகிறீர்கள் என்றால் அதற்காக கடைகளுக்கு போக அவசியம் இல்லை. ஏனெனில் அதனை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிமையான முறையில் ரெட் வெல்வெட் கேக் தயாரிக்கலாம். அதை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
மைதா மாவு – 65 கிராம்
சர்க்கரை தூள் – 1 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் – 1/8 தேக்கரண்டி
சோடா உப்பு – 1/8 தேக்கரண்டி
பால் – 100 கிராம்
வெண்ணெய் – 25 கிராம்
எண்ணெய் – 2 தேக்கரண்டி
பீட்ரூட் சாறு – ¼ கப்
எலுமிச்சை சாறு – சிறிதளவு
கோகோ தூள் – 1/2 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், சர்க்கரை தூள், கோகோ பவுடர், தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கி தனியாக வைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் பால், பீட்ரூட் சாறு, வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். அதன் பின் உலர்ந்த மைதா மாவு கலவையை, வெண்ணிலா எசன்ஸ் கலவையுடன் சேர்த்து மென்மையாக, பஞ்சுபோன்று மாறும் வரை நன்கு கலக்கவும்.
சிவப்பு வண்ணத்தில் இருக்கும் பேக்கிங் பவுடரை சில துளிகள் சேர்த்து நன்கு கலக்கி, அதனுடன் உருகிய வெண்ணெய், எண்ணெய், எலுமிச்சை சாறு சேர்த்து மீண்டும் நன்கு கலக்கி எடுத்தால் கேக் மாவு இப்போது தயார்.
நான்கு சிறிய அளவு கிண்ணங்களை எடுத்து, அதில் ஒவ்வொன்றிலும் கப் லைனர்களை வைத்து, மாவுடன் நிரப்பவும்.
பின்பு அனைத்து கிண்ணங்களையும் ஒரு ஸ்டாண்டில் வைத்து, அதை சூடான கடாயில் மேல் வைத்து, கடாயை மூடி, கப்கேக்குகளை நடுத்தர உயர் தீயில் 15-20 நிமிடங்கள் வேக வைக்கவும்.
அதனை அடுத்து கேக் வெந்ததும் பாத்திரத்தில் இருந்து கிண்ணங்களை வெளியே எடுத்து, ஒவ்வொரு கிண்ணத்தையும் தலைகீழாக மாற்றி, அதிலிருந்து கப்கேக்குகளை அகற்றவும். இறுதியில் குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர வைத்து சாப்பிடலாம்.