கணவாய் மீன் பிரட்டல் செய்ய தேவையான பொருட்கள்:
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கணவாய் மீனை எடுத்து, சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பின்பு வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
மேலும் அடுப்பில் மண் சட்டி அல்லது கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சோம்பு, வெந்தயம் சேர்த்து பொரிந்ததும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு வெங்காயம் வதங்கியபின் பச்சை மிளகாய், பூண்டு, தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். அதற்கு அடுத்து, தக்காளி வதங்கியதும் சிறிய துண்டுகளாக வெட்டிய கணவாய் மீன், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து சில நிமிடம் வதக்கவும்.
மேலும் அதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து சிறிது கிளறி மூடிவைத்ததும் 15 நிமிடம் வேகவைத்தபின் தேங்காய் பால் நன்கு வற்றி கெட்டியானதும் இறக்கி பரிமாறினால் ருசியான கணவாய் மீன் பிரட்டல் ரெடி.