ஆப்பிள்-பூசணி ஹல்வா:
எந்தவொரு இந்தியப் பண்டிகையும் ஹல்வா இல்லாமல் முழுமையடையாது என்ற ஒரு ஐதீகம் உண்டு. அப்படிப்பட்ட ஹல்வாவை உருவாக்க சீனிக்கு மாற்றாக தேங்காய் வெல்லத்தை பயன்படுத்தலாம். சுவை அதிகமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பூசணி – 1 கப்
ஆப்பிள் – 1 கப் வெட்டி வதக்கியது
தேங்காய் வெல்லத்தூள் – 1 கரண்டி
உலர்ந்த பழங்கள் – சிறிதளவு
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் சிறிது பிசைந்த பூசணி,வெட்டி வதக்கிய ஆப்பிள் சேர்த்து, அதனுடன் ஒரு தேக்கரண்டி தேங்காய் வெல்லம் தூள் சேர்த்து நன்கு கிளறினால் ஆரோக்கியமான ஆப்பிள் ஹல்வா ரெசிபி தயார். அதனை இனிப்புடன் நிரப்ப உலர்ந்த பழங்களை அலங்கரிக்கவும்.