பொதுவாக சீடை என்றாலே அரிசி மாவை வைத்து தான் செய்வார்கள். ஆனால் ரவையை வைத்து ருசியான மொறு மொறு சீடை செய்யலாம். இதற்காக பெரிதாக கஷ்டப்பட வேண்டியஅவசியம் இல்லை. இதனை ரவையில் தான் செய்தோமா எனறு மற்றவர்கள் கேட்கும் அளவிற்கு அவ்ளோ ருசியாக இருக்கும். இந்த சீடையை, ரவை மற்றும் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே அசத்தலான சீடையை செய்யலாம் என்பதனை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் – 1/4 கப்
நெய் – 1 தேக்கரண்டி
வெண்ணெய் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு ரவை – 1 கப்
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் – 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை இவற்றை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து கொள்ளலாம். பின்பு ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் ரவை, 1/4 கப் துருவிய தேங்காய், 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/4 தேக்கரண்டி மிளகுத்தூள், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி நெய், ஒரு தேக்கரண்டி வெண்ணெய், தேவையான அளவு உப்பு ஆகியவைற்றை சேர்த்து ஒன்றாக கலந்து விடவும்.
அனைத்து பொருட்களும் ஒன்றோடு ஒன்றாக நன்கு கலக்கும் அளவுக்கு சிறுது தண்ணீர் ஊற்றி மாவை பிசைந்து கொள்ளவும். பின் அதனோடு ஊற வைத்த கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பையும் சேர்த்து பிசையவும். அதனை 7 – 8 நிமிடங்கள் வரை ஒரு ஈர துணி போட்டு மூடி கொள்ளலாம்.
அதனை அடுத்து ஊறிய மாவை, உள்ளங்கைகளில் சிறிதளவு எண்ணெய் தொட்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதை ஒரு காட்டன் துணியின் மீது வையுங்கள். பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை போட்டு பொரித்து எடுத்தால் ருசியான, மொறு மொறு ரவை சீடை தயார். இந்த தீபாவளி பண்டிகையை இந்த சீடையுடன் கொண்டாடுங்கள்