Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

stuffed sweet ஆம்லெட்… குழந்தைங்களுக்கான ரெசிபி…!!

ஸ்டப்டு இனிப்பு ஆம்லெட் செய்ய தேவையான பொருட்கள்:

வேக வைத்த சாதம்                                            – 5 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை                                                                  – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு, ஜாதிக்காய்                                                –  சிறிதளவு
வெண்ணெய்                                                          –  தேவைக்கேற்ப
முட்டை                                                                       –  4
தக்காளி                                                                     – சிறிதளவு
உருளைக்கிழங்கு                                                 – சிறிதளவு
பீன்ஸ்                                                                          – சிறிதளவு

செய்முறை: 

பாத்திரத்தில் தக்காளி, உருளைக்கிழங்கு, பீன்ஸை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து சிறிது வெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்த காய்களை சேர்த்து நன்கு வதக்கி, அதனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.

அதனையடுத்து பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் சாதம், சர்க்கரை, உப்பு, ஜாதிக்காய் தூள், கால் டீஸ்பூன் தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் முட்டையை எடுத்து அதிலுள்ள மஞ்சள் கருவையும், வெள்ளைக் கருவையும் தனித்தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும்.

மஞ்சள் கருவை பிசைந்த  சாதத்துடன் கலக்கி கொள்ளவும். அதிலுள்ள வெள்ளைக் கருவை எடுத்து நன்றாக நுரை வரும் அளவுக்கு அடித்து, பின்பு கலந்து வைத்த சாதத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.

அடுப்பில் தோசை கல்லை வைத்து அதில் வெண்ணெய் உற்றி காய்ந்ததும் கலந்து வைத்த சாதத்தை அதில் சேர்த்து ஆம்லெட் போல்  வார்த்து வெந்ததும் இரு புறமும் கரண்டியால் புரட்டி கொள்ளவும்.

இதனுடன் வதக்கி வைத்த காய்கறி கலவையை ஆம்லெடின் மத்தியில் வைத்து சுருட்டி பரிமாறினால் சுவையான ஸ்டப்டு இனிப்பு ஆம்லெட் ரெடி.

Categories

Tech |