கரும்புச்சாறு பொங்கல் செய்ய தேவையான பொருட்கள் :
கரும்புச்சாறு – 2 கப்
பச்சரிசி – 1 கப்
பாசிப்பருப்பு – கால் கப்
ஏலக்காய் தூள் – சிறிதளவு
நெய், முந்திரி பருப்பு – தேவைக்கு ஏற்ப
திராட்சை – தேவைக்கு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, பாசிப்பருப்பை எடுத்து தண்ணீர் விட்டு சுத்தம் செய்து கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து அதில் சுத்தம் செத்த பச்சரிசி, பாசிப்பருப்பை சேர்த்து நன்கு வேக வைத்து குழைய வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை சேர்த்து வறுத்து எடுக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றி குழைய வைத்த பச்சரிசி, பருப்புகலவையுடன் கரும்புசாறு, ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
இறுதியில் வறுத்த முந்திரி, திராட்டையை கொதிக்க வைத்த கலவையின் மேலே தூவி இறக்கி பரிமாறினால் சுவையான கரும்பு சாறு பொங்கல் ரெடி.