Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தந்தூரி சிக்கன்…இவ்ளோ டேஸ்டா…அதுவும் வீட்டுலயா…!!

தந்தூரி சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்:

கோழி                         – 1
எலுமிச்சம்பழம்    – ரெண்டு
தயிர்                           – ஒரு மேசைக்கரண்டி
சிகப்பு பவுடர்         – கால் தேக்கரண்டி
டால்டா                       – 25 கிராம்
மிளகு, உப்பு             – தேவையான அளவு

செய்முறை:

கோழியை தோல் உரித்து பெரிய துண்டுகளாக வெட்டி முள் கரண்டியால் நன்றாக குத்தி வைக்கவும்.

பாத்திரத்தில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து, தயிர், மிளகுத்தூள், கலர் பவுடர் கலந்து குத்தி வைத்திருக்கும் கோழியையும் இட்டு 6 மணி நேரம் ஊறவைக்கவும்.

அடுப்புக் தீயை மூட்டி கம்பியில் குத்திய சிக்கனை தணலில் சுட்டு எடுக்கவும். ஒரு பிளேட்டில் டால்டா ஊற்றி ஒவ்வொரு முறையும் சுட்ட கரியைப் மறுபடியும் கம்பியில் மாட்டி கறியை நன்றாக எல்லா பக்கமும் வேக விடவும். அதேபோல் மற்ற எல்லா துண்டுகளையும் தயாரிக்கவும்.இப்போது சுவையான தந்தூரி சிக்கன் தயார்.

Categories

Tech |