பற்கள் அழகாகவும், வெண்மையாகவும் ஜொலிக்க என்ன செய்வது, என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
“பல் போனால் சொல் போச்சு” என்னும் முது மொழிக்கு ஏற்ப பற்களை பாதுகாப்பது மிகவும் அவசியமானது. வாதம், பித்தம், கபம் அதிகரித்தால் பற்கள் மஞ்சளாக மாறும். வெண்நிறமாக இருக்கும் பற்களில் ஏற்படும் பாதிப்பு தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். ஆகவே பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
அதற்கான நிவாரணங்கள் இதோ:
அத்தி மரத்தின் இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக இருக்கும்போது வாய்க் கொப்பளிக்க வாய்ப்புண், பல் ஈறு பிடித்தல் போன்ற நோய்கள் எளிதில் குணமாகும்.
வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது, முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.
பப்பாளிப் பழத்தை 4- 5 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல் கூச்சம் நீங்கிவிடும். அதனால் சர்க்கரை சத்து சேர்ந்து விடும் என்று பயம் வேண்டாம்.
வாகை வேர் பட்டையை நீர் விட்டு காய்ச்சி வெது வெதுப்பாக இருக்கும் போது அதனைக் கொண்டு வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாவதோடு பல் ஈறு உறுதியாகும்.