இளநீர் வழுக்கை ஐஸ்கிரீம் செய்ய தேவையான பொருள்கள்:
கிரீம் – 1 கப்
இளநீர் வழுக்கை – 2 கப்
கன்டன்ஸ்டு மில்க் – அரை கப்
சர்க்கரை – அரை கப்
இளநீர் – 1 கப்
செய்முறை:
முதலில் தேங்காயை நன்கு துருவி கொள்ளவும். இளநீரில் உள்ள வழுக்கையை எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
மிக்சி ஜாரில் துருவி வைத்த தேங்காய், சர்க்கரை, கன்டன்ஸ்டு மில்க் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
கிண்ணத்தில் கலக்கி வைத்த கண்டன்ஸ்டு மில்கை ஊற்றி அதில் சிறிது துண்டாகளாக நறுக்கி வைத்த இளநீர் வழுக்கையையும் சேர்க்கவும்.
அடுத்தது அதே ஜாரில் 1 கப் கிரீமை, கலக்கி வைத்த தேங்காய் கலவையின் மீது ஊற்றி மீண்டும் நன்றாக கலக்கி எடுத்து கொள்ளவும்.
அதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி ஃபிரீசரில் 6 முதல் 8 மணி நேரம் வைக்கவும். பின்பு அதை எடுத்து பரிமாறினால் சுவையான இளநீர் வழுக்கை ஐஸ்கிரீம் ரெடி.