Categories
பல்சுவை

நடிகர் அஜித்தின் மறுபக்கம்.. உங்களுக்கு தெரியுமா….?

எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தமிழ்த் திரையுலகில் நுழைந்து தனது கடின உழைப்பால் முன்னேறி தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி அவர்கள் மனத்தில் தல என்று நிலைத்திருபவர் தான் அஜித்குமார். தெலுங்கு திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தற்போது தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவராக உள்ளார்.

இவர் குழந்தை நட்சத்திரமாக இருந்து நடிகையாக வளர்ந்து அவருடன் அமர்க்களம் படத்தில் இனைந்து நடித்த ஷாலினியை திருமணம் செய்துகொண்டார். இவர் மூன்று முறை பிலிம்பேர் விருதுகள், இரண்டு முறை சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளும், மூன்று முறை விஜய் டிவி விருதுகளையும் மற்றும் இரண்டு முறை தமிழக தமிழ்நாடு மாநகர அரசு விருதுகள் என பல்வேறு விதமான விருதுகளை பெற்றுள்ளார்.இவர் ஒரு கார் பந்தய வீரராகவும் இருந்திருக்கிறார்.

இந்தியாவில் உள்ள ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தில் பாலக்காடு தமிழ் ஐயர் சுப்பிரமணி  கொல்கத்தா சிந்து சமூகத்தை சேர்ந்த மோஹினி என்பவருக்கும் இரண்டாவது மகனாக  மே மாதம் 1 ஆம் தேதி 1971 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரே ஹைதராபாத்தில் பிறந்திருந்தாலும் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் வளர்ந்தார்.

சென்னையில் உள்ள ஆயிரம் விளக்குப் பகுதியில் இருக்கும் ஆசான் உயர்நிலை பள்ளியில் தன்னோட பள்ளிக்கூடம் தொடங்கிய அவர் படிப்பின் மீது பற்றில்லாமல் இருந்துள்ளார். இதனால் 1986 தனது உயர்நிலைக் கல்வியைத் தொடங்குவதற்கு முன்பே பெற்றோர்களின் விருப்பத்தையும் எதிர்த்து தனது பள்ளி படிப்பை நிறுத்தியுள்ளார்.

தன்னுடைய பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட அஜித் இரண்டு சக்கர வாகனத்தில் மெக்கானிக்கான பள்ளியில் சேர்ந்து படித்தார். பைக் மற்றும் கார் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்ட அவர் தானாகவே அவற்றை ஓட்ட கற்றுக்கொண்டு அதற்கான உரிமத்தையும் பெற்றுக்கொண்டார்.

பைக் பந்தயம் தான் தனது தொழில் பாதை என்று தேர்ந்தெடுத்த அவர் அதில் கலந்து கொள்ளப் பணம் வேண்டுமென்பதால் அவ்வப்போது பத்திரிக்கை விளம்பரங்கள், தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்து வந்தார். பைக் பந்தயத்தின் போது ஏற்பட்ட காயத்தினால் அவரைப் பலரும் அச்சு ஊடகங்கள் விளம்பரங்களில் நடிப்பதற்கு தூண்டிவிட்டனர். இதனால் அவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது.

பந்தயமா சினிமாவா என்று அவருக்கு சிந்தனை எழுந்த பொழுது பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். 1991 ஆம் ஆண்டு தனது 20 வது வயதில் தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமான இவர் அந்த படத்தின் இயக்குனர் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டார்.

பிறகு 1992ஆம் ஆண்டு பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். மேலும் அந்த படம் அவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருதையும் பெற்றுக்கொடுத்தது. அதே ஆண்டு செல்வா அவர்களின் இயக்கத்தில் அமராவதி படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இந்த படம்தான் தமிழ் திரையுலகில் அஜித் குமார் நடித்த முதல் திரைப்படம். இதைத் தொடர்ந்து மேலும் சில தமிழ் படங்களில் நடித்தார். 1995 ஆம் ஆண்டு வெளிவந்த ஆசை திரைப்படம் அவருக்குப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதுமட்டுமில்லாமல் தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரம் என்ற அந்தஸ்தையும் பெற்றுக்கொடுத்தது.

 

தன்னுடைய இயல்பான மற்றும் எளிமையான நடிப்பினால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித்குமார் மேலும் பல தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார். அவருடைய இளமைப் பருவத்திலிருந்தே ரேஸ் கார், பைக் ஓட்டுவது என அதிக ஆர்வம் காட்டி வந்த அவர் மும்பை, சென்னை, டெல்லி போன்ற இடங்களில் நடந்த கார் ரேஸ்களில் கலந்து வெற்றி பெற்றவர்.

சர்வதேச அரங்கில் ரேஸ்களில் பங்கேற்கும் இந்தியர்களுள் ஒருவர் என்றும், ஃபார்முலா சாம்பியன் போட்டியில் வென்ற ஒரே இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றார். ஜெர்மனி, மலேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்ட அவர் 2003 ஆம் ஆண்டு ஃபார்முலா ஆசியா பிஎம்வ் சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியிட்டார்.

ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் பந்தயங்களில் கலந்துகொண்ட மூன்று இந்தியர்களுள் அஜித்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலக வாழ்வில் எவ்வளவு வெற்றி பெற்றிருந்தாரோ அதே போன்று சாதாரண மனிதனாகவும், கருணை உள்ளம் கொண்டவராகவும், ஏராளமான மக்களுக்கு உதவி செய்பவராகவும் இருக்கின்றார்.

Categories

Tech |