Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“தெய்வம் தந்த அற்புத உணவு” தினமும் சாப்பிட்டால் எந்த நோயும் வராது….. கம்மங் கூழின் டாப்-10 நன்மைகள்…!!

கம்மங்கூல்-இன் மருத்துவ நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். 

உடல் சூடு குறையும் : உடல் சூடு காரணமாக சிறுநீரக கோளாறுகள், உடல் கொப்புளங்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படும். தினமும் இரண்டு டம்ளர் கம்மங் கூழ் குடிப்பதன் மூலம் உடல் சூடு சமநிலை அடைகிறது. 

எலும்புகள் வலுவடையும் : சுண்ணாம்பு சத்து கம்மங்கூழ் அதிகம் உள்ளதால், எலும்புகள் வலுவாக இது உதவி செய்கிறது. ஆர்த்தரைடீஸ் போன்ற வலி உள்ளவர்கள் கம்மங்கூழ் தினமும் பருகி வருவதால் நீண்டகால வலியில் இருந்து நிவாரணம் பெற முடியும். 

இதய நோய் : உடலில் உள்ள ட்ரைகிளிசரைடு அளவை குறைத்து ரத்தம் அடர்த்தியாவதை  தடுத்து இதய நோய்களிலிருந்தும், பக்கவாதத்தில் இருந்தும் காக்கிறது. 

வைட்டமின் டி அதிகரிக்கும் : கம்பு உணவில் உள்ள வைட்டமின் பி ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கிறது. இதில், உள்ள நியாசின் ரத்தத்தில் கொழுப்பு படிவதைத் தவிர்க்கிறது. ரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்பு அளவையும் அதிகரிக்கிறது. 

குடல் புற்றுநோயை தடுக்கும் : கம்பங்கூழில்  உள்ள நார்ச்சத்து மற்றும் லிக்னன் என்னும் பைட்டோ நியூட்ரியன்ட் குடலில் உள்ள கிருமிகளை அழித்து குடல் மற்றும் மார்பகப் புற்றுநோயில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. 

உயர் ரத்த அழுத்தம் சீராகும் : கம்மங்கூழ் இல் உள்ள மெக்னீசியம் ரத்தநாள சுவற்றை தளர்த்தி இரத்த ஓட்டத்தை அதிகரித்து, அதன் மூலம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. மேலும் ஆஸ்துமா மற்றும் ஒற்றைத் தலைவலிக்கு சிறந்த மருந்தாக அமைகிறது. 

உடல் எடை குறையும் : தானிய உணவான கம்பு உடல் எடை குறைவதற்கு உறுதுணையாக இருக்கிறது. இதிலுள்ள டிரிப்டோபேன்கள் எனும் அமினோ அமிலம் அதிக பசி ஏற்படுவதை குறைக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து அதிகமான அளவில் உண்பதை குறைத்து விடும். உடல் எடை குறைக்க முயல்பவர்கள் இதனை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். 

சர்க்கரை நோய்க்கு தீர்வு : இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதால், செரிமான செயலை தாமதப்படுத்தி ரத்தத்தில் சர்க்கரை அளவை சரியாக வைத்திருக்க உதவுகிறது. முக்கியமாக டைப் 2 சர்க்கரை நோய்களுக்கு சிறந்த மருந்து கம்மங் கூழ் தான். 

ரத்த சோகை : இரும்பு சத்து அதிகமுள்ள கம்மங்கூழ் ரத்த செல்களின்  உற்பத்தியில் முன்னணி வகிக்கின்றது. உடலின் ரத்த அளவை அதிகரிக்க சிறந்த உணவாக இருக்க முடியும். 

ஆழ்ந்த தூக்கம் : கம்புவில் உள்ள ட்ரிப்டோபன் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. தினமும் உறங்கும் முன் கம்பங்கூழ் குடித்து வந்தால், நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். 

Categories

Tech |