அக்கார வடிசல் செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி – அரை கிலோ
வெல்லம் – அரை கிலோ
பாசிப்பருப்பு – சிறிதளவு
கடலைப்பருப்பு – சிறிதளவு
நெய் – 100 கிராம்
முந்திரிப் பருப்பு, ஏழம் – தேவைக்கேற்ப
பால் – 1 லிட்டர்
செய்யும் முறை:
முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து பாலை ஊற்றி கொதிக்க விடவும். அதனுடன் ஒரு கப் தண்ணீர், பச்சரிசி, பாசிப்பருப்பு, கடலைபருப்பை சேர்த்து மீதமான தீயில் குழைய வேக விடவும்.
கடாயை அடுப்பில் வைத்து, அதில் வெல்லம்,சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கி கொள்ளவும். இதனை வேக விட்ட அரிசி கலவையில் ஊற்றி நீர் வற்றும் வரை கிளறவும்.
மேலும் அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி காயந்ததும் ஏலப்பொடி, முந்திரியை சேர்த்து வறுத்து எடுத்து, அதை வேக வைத்த அரிசி கலவையில் உற்றி கிளறி இறக்கி பரிமாறினால் சுவையான அக்கார வடிசில் ரெடி.