Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அழகர் கோவில்… ஸ்பெஷல் ரெசிபி…!!

அழகர் கோவில் தோசை செய்ய தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி                                       – 200 மில்லி
உளுந்தம் பருப்பு                               –  200 மில்லி
பச்சரிசி                                                   –  700 மில்லி
மிளகு                                                       – 1 தேக்கரண்டி
இஞ்சி                                                         –  சிறுதுண்டு
கருவேப்பிலை, உப்பு                         –  தேவையான அளவு

செய்முறை:

பாத்திரத்தில் புழுங்கல் அரிசியையும், உளுத்தம் பருப்பையும், தோசைக்கு ஆட்டி எடுப்பது போல் ஆட்டி எடுத்து கொள்ளவும்.

மிக்சி ஜாரில் மிளகு, இஞ்சி, வற்றல் இவற்றை எடுத்து  நன்கு அரைத்துக் கொள்ளவும். பச்சரிசியை நன்கு இடித்து சலித்து கொள்ளவும்.

அரைத்த புழுங்கல் அரிசி, அரைத்த கலவை, அரைத்த பருப்பையும் ஒன்றாக சேர்த்து உப்பு போட்டு பிசைந்து வைத்து மறுநாள் காலையில் அடுப்பில் தோசை கல்லை வைத்து, அதில் நெய்விட்டு கலந்து வைத்த மாவை தோசை போல் ஊற்றி இருபுறமும் தோசை போல் சுட்டு எடுக்கவும். சுவையான அழகர் கோவில் தோசை தயார்.

Categories

Tech |