Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சளியை அடியோடு விரட்ட…எலும்பு சூப்..!!.

எலும்பு சூப் செய்ய தேவையான பொருட்கள்:

நெஞ்சு எலும்பு                  – கால் கிலோ
சின்ன வெங்காயம்        – 100 கிராம்
தக்காளி                               – 2
மிளகு                                     – 1 டீஸ்பூன்
சீரகம்                                     -1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்                        – சிறிதளவு

தாளிக்க:

பட்டை                                     – 2 துண்டு
கிராம்பு                                     – 1
ஏலக்காய்                                –  1
நெய்                                            – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு                                             – தேவையான அளவு
கருவேப்பிலை                      –  தேவையான அளவு
கொத்தமல்லி                         – தேவையான அளவு

செய்முறை:

ஆட்டின் நெஞ்செலும்பு எடுத்து நன்கு சுத்தம் செய்து கழுவி வைத்து கொள்ளவும்.பின்பு சிறிய வெங்காயம், தக்காளியை  நறுக்கி கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் மிளகை பொடியாக தட்டி எடுத்து கொள்ளவும்.

அடுப்பில்  குக்கரை வைத்து  வெட்டி வைத்த எலும்பு துண்டுகள், தட்டிய மிளகு, நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, அதனுடன் தண்ணீர் ஊற்றி முடி வேக வைக்கவும்.

வேக வைத்த குக்கரானது  மூன்று விசில் வரும்போது இறக்கி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு  தாளித்து வேக வைத்த எலும்புடன் சேர்த்து கிளறி பரிமாறினால் எலும்பு சூப் சூடாகவும் சுவையாகவும் இருக்கும்.

Categories

Tech |